போலி வாக்குறுதிகளின் இரைச்சல்கள் தான் மோடியின் பத்து ஆண்டுகள் ஆட்சியில் மக்கள் கண்ட சாதனைகள் என்கிறார் ‘பரகால பிரபாகர்’. இதற்கு நம் கொங்கு மண்டலத்தில் இருந்தே ஓர் உதாரணம் கூறலாம்.
கொங்கு மண்டலத்தின் நடைபெற்றுவரும் பல்வேறு தொழில்களில் முக்கியமானது வெட்கிரைண்டர் உற்பத்தி. கோவையின் அடையாளமாக உள்ள இந்த வெட்கிரைண்டர்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த தொழிலை சிதைக்கும் வண்ணம் அதற்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் உழைப்பை வரியாகப் பெற்றுக் கொண்டு, உரிய பங்கீட்டை வழங்க மறுக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இதனால், தமிழ்நாட்டி வளர்ச்சி தடுக்கப்படுகிறது. குறைவாக வரி தரும் உத்தரப் பிரதேசத்துக்கு அள்ளித் தரும் ஒன்றிய அரசு, இந்தியாவிலேயே இரண்டாவது அதிக வரி வருவாய் தரும் தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுக்கக் கூட ஒன்றிய அரசுக்கு மனமில்லை.
இந்த எதேச்சதிகார அரசியலைக் கடந்தும், நமது முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், வளர்ச்சிப் பணிகளையும், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் செம்மையாக செய்துகாட்டி வருகிறார். அடிமை அதிமுகவைப் போல, ரெய்டுக்கு பயந்து மாநில உரிமைகளை அவர்களிடம் அடமானம் வைக்கவில்லை.
வெறுப்பு அரசியலும், பிரித்தாளும் சூழ்ச்சியும்தான் பாஜகவின் அரசியல். அதை, வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அவற்றை செயல்படுத்தி வன்முறையை தூண்டி அதன் மூலம் ஆதாயம் அடைந்திருக்கிறது பாஜக. அந்த ஃபார்முலாவை கோவை மண்ணிலும் செயல்படுத்த வேண்டும் என திட்டமிட்டிருக்கிறது. அதை நாம் முறியடிக்க வேண்டும்.
கோவையில் திமுக பெறும் வெற்றி, கோவைக்கானது மட்டுமல்ல, இந்தியாவுக்கான வெற்றியும் கூட.
கணபதி ராஜ்குமார், படித்தவர், பண்பாளர். எளிமையானவர். கறைபடியாத கை கொண்ட Mr.Clean அரசியல்வாதி!
படித்தவர், பண்பாளர் என்பதால் அண்ணாமலைக்கு போட்டியளிக்க தகுதியானவர், வேலுமணியை எதிர்க்க சரியான நபர் என திமுக தலைமை கருதுகிறது.
கோவை தொகுதியில் கள நிலவரத்தை துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் கூறியுள்ளார். அதன்பிறகே கூட்டணிக்கு தராமல் கோவை தொகுதியை வாங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவரது பேச்சை கண்டு வியந்த ஸ்டாலின், வேலுமணி, அண்ணாமலைக்கு செக் வைக்க இவர் தான் சரியான ஆள் என்று முடிவு செய்து களம் இறக்கி உள்ளாராம்.