கோவை மக்களவை தேர்தல் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி பிரசாரம் செய்தார்.
இங்கு பிறந்து வளர்ந்த ராஜ்குமார் அவர்ரகளுக்கு வாக்கு கேட்பது என்பது ஒரு சம்பிரதாயமான செயல் எனவும் மக்கள் அவருக்குதான் வாக்களிப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும் என்றும் கூறிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி பிரசாரத்தை தொட௩்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “மாநிலத்திற்கு, குறிப்பாக பெண்கள், மற்றும் மாணவர்களுக்கு பல நலத் திட்டங்களை திராவிட மாடல் அரசு கொண்டுவந்துள்ளது. மாதந்தோறும் 1000 உரிமை தொகை திட்டத்தை முதல்வர் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்” என கூறி அமைச்சர் வாக்கு சேகரித்தார்.
வேட்பாளருடைய சொந்த தொகுதியான கணபதியில் அமைச்சர் பிரசாரத்தை தொடங்கினார்.
ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
உடன் கோவை மாவட்ட செயலாளர் என்.கார்த்திக், மேயர் கல்பனா மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.